Breaking News

தமிழ் உச்சரிப்பு | நகைசுவையுடன் ஒரு எடுத்துக்காட்டு

தமிழ் உச்சரிப்பை மாற்றாதீர்கள் | எடுத்துகாட்டு  

 நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை எப்படி அழைப்போம்
சம்மந்தி என்று தானே இப்போது அழைக்கிறோம் ஆனால் அது சரியா?

பிறகு எது சரி? பார்ப்போம் இங்கே

 ஒருகாலத்தில் நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை  சம்பந்தி என்று தான் அழைத்தார்கள் . ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது.


உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.
நம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள். ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை. மாறாக சம்மந்தி என்றே அழைக்கிறோம்.

அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க
அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க


என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.
ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்

சம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..

அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க
அம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.

ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார். எனவே தமிழில் உச்சரிப்பை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது.

என்ன...! இனி 'சம்மந்தி' ன்னு கூப்பிடுவீங்களா? இல்லை இல்லை ன்னு சொல்லுறது கேட்குது - நன்றி

No comments