Breaking News

தமிழ் கால அளவுகள் | பாபு நடேசன்



பண்டைகாலம் முதலே நம் முன்னோர்கள் பயன்பாட்டில் இருந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!! என நம்மை அதிக வியப்பில் ஆழ்த்தி பெருமை பட செய்கின்றனர் நாம் அனைத்தையும் மறந்து ஆங்கிலயோரின் அளவீடுகளையே பயன்படுத்துகிறோம் 


முன்னோர்களின் கால  அளவுகள்  
2 கண்ணிமை
=
1 கைந்நொடி
2 கைந்நொடி
=
1 மாத்திரை
2 மாத்திரை
=
1 குரு
2 குரு
=
1 உயிர்
6 உயிர்
=
1 கஷணிகம்
12 கஷணிகம்
=
1 விநாடி
60 விநாடி
=
1 நாழிகை

இது மட்டும் இல்லேங்க இன்னும், பொழுது, நாள், வாரம், மாதம் என வரிசை நீளமாக சொல்கிறது செல்கிறது. மேலும் காண்போம்

60 விநாடி
=
1 நாழிகை
நாழிகை
=
1 ஓரை
நாழிகை
=
1 முகூர்த்தம்
நாழிகை
=
1 சாமம்
4 சாமம்
=
1 பொழுது
2 பொழுது
=
1 நாள்
7 நாள்
=
1 கிழமை
15 நாள்
=
1 பக்கம்
30 நாள்
=
1 திங்கள்
6 திங்கள்
=
1 அயனம்
2 அயனம்
=
1 ஆண்டு

இத்தனை இனிமையான காலப் அளவுகளா?  ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்தோம் ? 

நாம் பேசும் இவைகளை பயன்படுத்தி பார்க்கலாமே...!
  • மாதம் இருமுறை () 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
  • ஆண்டிற்கு இருமுறை () 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !!
தமிழ் - ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்ற புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம் !!
8 சாமம்
=
1 DAY
2.5 நாழிகை
=
1 HOUR
1 நாழிகை
=
0.4 HOUR
2.5 விநாடி
=
1 MINUTE
1 விநாடி
=
0.4 MINUTE
1 விநாடி
=
24 SECONDS
1 கஷணிகம்
=
2 SECONDS
1 உயிர்
=
0.3333333333333333 SECOND
1 குரு
=
0.1666666666666667 SECOND
1 மாத்திரை
=
0.0833333333333333 SECOND
1 கைந்நொடி
=
0.0416666666666667 SECOND   =   41.66 MILLISECONDS
1 கண்ணிமை
=
0.0208333333333333 SECOND   =   20.83 MILLISECONDS

இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இபோழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல...
நம் காலத்தையும் தான்...

விழித்துக்கொள்வோம் தமிழர்களே !
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !!


நன்றி : வரலாற்று புதையல்

No comments