Breaking News

ஹரிதாஸ் (1944) | தமிழ் சினிமா வரலாற்று சாதனை படைத்த படம்

ஒரு கலைஞன்/ஒரு நடிகன் படத்தில் நடித்து அது வெளிவரும்போது சூழ்ச்சியின் காரணமாக சந்தேகத்தின் பேரில்  கைது செய்து சிறையில்  அடைகிறார்கள் . அந்த நடிகன் நிரபராதி என உலகிற்கு தெரியும் வரை அவர் நடித்த படம் வெற்றிகரமாக 113 வாரங்கள் ஓடிகொண்டிருக்கிறது.
1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.
சிறந்த குடும்பப்படம் - சிறந்த கதை - சிறந்த நடிப்பு - தூய தமிழ் வார்தைகள் (இன்றைய இளைஞர்களுக்கு பல வார்த்தைகள் புரியாது) தமிழனின் வாழ்க்கைமுறை | மணமகள் புகுந்த வீட்டில் எப்படி வாழவேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பான நடிப்பில் 1944 ஆம் ஆண்டிலேயே கலக்கி இருக்கிறார் தியாகராஜ பாகவதர். 
புதுமண தம்பதிகள் ஒரு முறை இந்த படத்தை பார்த்தல் நல்லது.

இந்த படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை
ஹரிதாஸ் (1944) 

​மேலும் இப்படத்தை பற்றிய விமர்சனத்திற்கு
http://www.maalaimalar.com/2011/02/17094758/bhagavathar-move-in-haridas.html​

No comments