Thursday, March 24, 2016

கோபமாக இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம் | ஓஷோ குட்டிக்கதை

நான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.

அவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.

அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.

“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”

எத்தனை சத்தியமான வார்த்தை!

நன்றி : முத்துசிதறல்

Wednesday, March 23, 2016

எச்சரிக்கை | உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு

உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு எப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக மாறி வருகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.கடந்த 650 லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் எப்போதும் இல்லாத அளவு 10 மடங்கு இந்த மாறுதல் அமைந்துள்ளது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.
இப்படி இந்த தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் பிராணிகள் மற்றும் பறவைகளின் நடத்தைகளில் மாறுதல் ஏற்படும். புதிய பூகோள நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தக அவைகள் வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மனித உறவுகளும் சீரழியும் நிலை ஏற்படும், இது ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.

டைனோஸர்களின் அழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களில் இதுவே மிகப்பெரிய மாறுதல் என்று ஸ்டான்போர்டைச் சேர்ந்த தட்பவெப்ப நிலை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த தட்பவெப்ப நிலை மாறுபாட்டாலும், அதிகமான வெப்பமயமாதலாலும் ஆங்காங்கே பஞ்சம் ஏற்பட்டு,   பஞ்சத்தினால் வெவ்வேறு பகுதிகளில் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படும் வாய்ப்பு 50 விழுக்காடிற்கும் அதிகமாகும்  உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.


ஆகவே மனித உறவுகள் மேம்படவும் சீரடையவும் உலக வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது மனித குலத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக ஆகிறது.

நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் 
தொகுப்பு: பாபு நடேசன்
Wednesday, February 10, 2016

அண்ட்ராய்டு செயலிகள் | தமிழில் பெயர்கள் சிரிப்புக்காக


அண்ட்ராய்டு பயன்பாட்டில் இருக்கும் செயலிகள்  எல்லாத்துக்கும் தமிழ்ல பேர் வச்சா எப்படி இருக்கும்? சும்மா தமாசுக்கு தான் ( சிரிப்புக்காக ) காண்டாயிடாதீங்க .
.
Angry Bird - காண்டான குருவி!
.
Temple Run - கோயிலுக்குள்ள ஓடு!
.
Pattern Lock - 8 புள்ளி கோலம்!
.
Skype - மொகரகட்ட!
.
Messenger - மொக்க போடு!
.
UC Mini - அணில் குட்டி!
.
Candy Crush - பல்லி மிட்டாய்!
.
Play Store - பொம்ம கடை!
.
Whatsapp - என்னவாங்!
.
Twitter - வாய்ல நல்லா வருது!
.
Fruit Ninja - வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு!
.
Talking Tom - பூன புலுவுது!
.
Xender - அள்ளி போடு!
.
MX Player- எம்.எக்ஸ்.வீரர்!
.
Mp3 Cutter - ஒனக்கு இது போதும்!
.
Photo Editor - மூஞ்சிய கழுவு.

மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை கருத்துரை பகுதியில் சொல்லுங்கள்.

நன்றி : தமிழ் ஊடகம்

Friday, January 22, 2016

குடியரசு தினம் ஏன் கொண்டாடுகிறோம் - பாபு நடேசன் | தமிழ் அறிவு கதைகள்

 குடியரசுத் தினம்னா என்ன? ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்? 

 வரலாறு முக்கியம் வாசகரே...! 

இதுக்கு பதில்....!

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ, சுதந்திரக்காக போராடுன பல தலைவர்கள் வெள்ளைக்காரங்க ’டொமினியன்' அந்தஸ்து கொடுத்தா போதும்னு தான் நினைச்சாங்களாம்.

டொமினியன் அந்தஸ்தா? அப்படின்னா.......!? என்னான்னு கேட்கிறது புரியுது, 

கீழே படிங்க...!

டொமினியன் அந்தஸ்துன்னா, அரசுரிமைன்னு சொல்லலாம். இன்னும் தெளிவா சொல்லணும்னா வெள்ளைக்காரங்களோட அதிகாரத்துக்கு உட்பட்ட சுயமான ஆட்சி. ஆனா, அது சுயாட்சியா இருந்தாலும் கூட நம் நாட்டோட பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை அவுங்கதான் நிர்வகித்தார்கள். 


இது நம்ம தலைவர்களான நேரு, பட்டேல் போன்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. முழுமையான சுயராஜ்யம் தான் வேணும்னு போராடுனார்கள். இதை மற்ற தலைவர்களும் ஏத்துக்கிட்டாங்க. 

ஆனா, 1947-ல்ல வெள்ளைக்காரங்க நமக்கு சுதந்திரம் கொடுத்தப்ப டொமினியன் அந்தஸ்துதான் மட்டும் தான் கொடுத்தாங்க. அதனால, வெள்ளைக்காரங்க நியமிச்ச கவர்னர் ஜெனரல்தான் நம்ம நாட்டோட தலைவராக  இருந்தார்.
சுதந்திரத்துக்குப் பின்னால, யாரும் இஷ்டப்படி ஆட்சி செய்யக்கூடாதுன்னு அரசியலமைப்பை உருவாக்க நம்ம தலைவருங்க முடிவு செஞ்சாங்க. அப்படி உருவான அரசியலமைப்பு, 1949-ம் வருஷம் நவம்பர் 26 அன்னைக்கு நம்ம நாட்டு அரசியல் நிர்ணய சபை ஏத்துக்கிட்டங்க.

அதுக்கப்புறம் அது முறைப்படியா 1950-ம் ஆண்டு ஜனவரி 26 அன்னைக்கு நடைமுறைக்கு கொண்டுவந்தாங்க. இதனால வெள்ளைக்காரங்களால நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் பதவி பறிபோனது. டொமினியன் அந்தஸ்தும் பறிபோனது. நம்ம நாடு குடியரசு நாடாக மலர்ந்தது. புதுசா குடியரசுத் தலைவரும் பதவி எட்டுகொண்டார்கள் (டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950).
பீரங்கிகளை எதிர்த்து
சாலைகளில் ஓடி
துணிச்சலாக பெறப்பட்ட சுதந்திரம்
இன்று 
குண்டுத் துளைக்காத 
கூண்டுகளில் அடைப்பட்டு
மக்களிடம் கையசைக்கின்றது
“இது தான் இன்றைய சுதந்திரம்!”
 உங்களுக்கு நேரம் இருந்தால் கீழ்க்கண்டவற்றையும்  படித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
 • (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.
 • (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.
 • (1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.
 •  (1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.
 • (1920) – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்
 • (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்
 • (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள்  சி.ஆர்.தாஸ்,  சத்யமூர்த்தி, முகமது அலி ஜின்னா,  புலாபை தேசாய்.
 • (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது
 • (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு –  காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.
 • (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.
 • (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.
 •  (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.
 • (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.
 • (1947) – ஆகஸ்டு (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.
இந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில்  நவம்பர்  (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.
 • (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.
இந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.
 • (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்!