Thursday, July 20, 2017

ஆசிரியை வசுந்தரா பணி ஓய்வு விழா | நெய்வேலி வடபாதி


ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் தீட்டுபவர்கள் ஆசிரியர்கள், பள்ளி கல்விக்கு செல்லும் முன்பே எங்களை வைரம் தீட்டிய ஆசிரியை திருமதி வசுந்தரா அவர்கள்.

மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

நாட்கள் அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. 1982-1984 இருக்கும் என நினைக்கிறன், தலையில் எண்ணெய் தடவி, நன்கு தலை சீவி, விபூதி பூசி, கையில் ஒரு தட்டு எடுத்துக்கொண்டு.....! சந்தோசமாக பால்வாடிக்கு செல்வது வழக்கம்.
1980-90 காலங்களில் சில ஊர்களில் மதிய உணவுக்காக அங்கன்வாடிக்கு செல்வது வழக்கம், ஆனால் எங்கள் ஊரில் படிப்புக்காகவும், விளையாட்டுக்காகவும், பாடல்களுக்காகவும் மற்றும் நல்பழக்க வழக்கங்களுக்காகவும் செல்வது வெகு சிறப்பு,  காரணம் எங்கள் அங்கன்வாடி ஆசிரியை வசுந்தரா சம்பத்

குழந்தைகளை
அன்பில் அரவணைத்து
இன்முகத்தால் வரவேற்று
பண் பல பாடி
பகுத்தறிவு புகட்டி
சத்துணவு ஊட்டி
சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
என்ற பாரதியின் பாடலோடு கல்வி புகட்டியவர் இவர்


ஒரு சிறு கோபம் கூட காண முடியாது இவர்களிடம். குழந்தைகளை அன்போடு அரவணைத்து பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். கல்வியை விருப்பமான அறிவாக, கலையாக குழந்தைகளிடம் கற்பிக்க முனையும் இத்தகைய ஆசிரியயைப் பெற்ற நாங்கள் நிச்சயமாக அதிர்ஷடசாலிகள்தான்.


முதல் தமிழ், முதல் தாய்மொழி எழுத்தான "அ" அவர்களிடமே நாங்கள் முதலில் உச்சரித்தோம்.


இவரின் எளிமையான ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக மட்டும் அல்ல!
வாழ்நாளில் நீ எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத் தான்
என்று எங்களுக்கு புரிய வைத்தவர்.

அபாகஸ் என்னும் மணிச்சட்ட படிப்பினை எங்களுக்கு 1983 களிலேயே வழங்கியவர் இவர் 


அவர் பயின்ற கலை, ஓவியம் அனைத்தையும் எங்களுக்கு பார்க்க கொடுப்பர், இன்னும் அந்த நீங்க நினைவுகளாக இருக்கிறத.

தீக்குச்சியால் ஒட்டிய வீடு, மரக்கட்டையால் ஆனா வடிவங்கள் (shapes) இவைகளையெல்லாம் குழந்தைகள் பார்க்க, விளையாட கொடுப்பார்கள் அன்று! கனிவுடன் கல்வியை தந்தவர்
இன்று! கண்ணீரில் முழ்கடித்து செல்கிறார்....

ஒவ்வொருவனுக்கும் ஒரு பெயர்
இவர்களால் ஆனது தனிப்பெயர்
நாளை அங்கன்வாடியின்  நினைவுகளும் சுமக்கும் இவர் பெயர்…இன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தான்

உங்கள் அன்புக்குரிய
பாபு நடேசன் மற்றும் குடும்பத்தார்கள்
நெய்வேலி வடபாதி பள்ளத்தான்மனை பழைய அங்கன்வாடி மாணவர்கள்