Breaking News

எச்சரிக்கை | உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு

உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு எப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக மாறி வருகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.கடந்த 650 லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் எப்போதும் இல்லாத அளவு 10 மடங்கு இந்த மாறுதல் அமைந்துள்ளது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.
இப்படி இந்த தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் பிராணிகள் மற்றும் பறவைகளின் நடத்தைகளில் மாறுதல் ஏற்படும். புதிய பூகோள நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தக அவைகள் வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மனித உறவுகளும் சீரழியும் நிலை ஏற்படும், இது ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.

டைனோஸர்களின் அழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களில் இதுவே மிகப்பெரிய மாறுதல் என்று ஸ்டான்போர்டைச் சேர்ந்த தட்பவெப்ப நிலை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த தட்பவெப்ப நிலை மாறுபாட்டாலும், அதிகமான வெப்பமயமாதலாலும் ஆங்காங்கே பஞ்சம் ஏற்பட்டு,   பஞ்சத்தினால் வெவ்வேறு பகுதிகளில் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படும் வாய்ப்பு 50 விழுக்காடிற்கும் அதிகமாகும்  உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.


ஆகவே மனித உறவுகள் மேம்படவும் சீரடையவும் உலக வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது மனித குலத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக ஆகிறது.

நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் 
தொகுப்பு: பாபு நடேசன்




No comments