Breaking News

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்?

Thanks: Twiiter:@balu_sg
புதிதாக வீடுகட்டுபவர்கள் கவனத்திற்கு..உங்கள் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்னு இந்த #திரட்ட பாருங்க..🙏 
வீட்டு ஒயரிங் செய்யும் சில முக்கியமான விசியங்கள நீங்க கவனிக்க வேண்டும் என்னனா..? 👇

ஒவ்வொரு ரூம் கனைக்சனை தனி சர்க்யூட்டாக பிரிச்சு அந்த லைனை மெயின் சுச்சு இருக்கும் ஏரியாவுக்கு கொண்டு செல்லனும்..👇

ஏன்னா பெட்ரூம்ல ஓடும் ஒரு பேன் சாட் சர்க்யூட் ஆயிட்டா அந்த சர்க்யூட் #mcb மட்டும் ட்ரிப் ஆகனும்..மத்த ரூம் கனைக்சன் டிஸ்டப் ஆகாது..👇

அடுத்து கிச்சன் லைன்க்கு இன்புட் லைன் 4sqmm ஒயர்ல மெயின் சுச்சுல இருந்து லைன் கொண்டு போகனும் ஏன்னா..? 👇

வெட்கிரைன்டர், மிக்ஸ்சீ,எலக்ட்ரிக் ஸ்டவ், எக்ஜாஸ்ட் பேன்னு அங்க லோடு அதிகமாக இருக்கும்.. 👇

அடுத்து AC எந்த ரூம்ல மாட்லாம்னு ஐடியா இருந்தா அந்த லைன் 4sqmm ஒயர்ல தனி சர்க்யூட்டாக மெயின்ல இருந்து கொண்டு வந்துடனும்..👇

அடுத்து வாசிங் மெசின் சர்க்யூட்ட 2.5sqmm ஒயர்ல தனி சர்க்யூட்டா மெயின்ல இருந்து கொண்டு வந்துடனும்..👇

இதே மாதிரி எல்லா லைனையும் மெயின் இருக்க பக்கம் கொண்டு வந்து தனி தனி சர்க்யூட்டா சிங்கிள் போல் #MCB வழியாக லைன் எடுத்து கொடுக்கனும்.👇

அடுத்து #EB மீட்டரில் இருந்து வரும் லைன் 65A பிஸ்கேரியர்ல கனைட் பண்ணி உங்க லோடுக்கு தகுந்த மாதிரி பீஸ் போட்டு ஆதுல இருந்து மெயின் சுச்சுக்கு போகும் லைன் அந்த மெயின் சுச்சு 63A இருக்கனும்..👇

எதுக்காக 63A யூஸ் பண்ணனும்னா உங்க வீட்ல புல் லோடு கொடுத்தாலும் மெயின் சுச், மீட்டர் கட்டவுட் பீஸ் யூனிட் பல வருடங்களும் ஒன்றும் ஆகாது.👇

அடுத்து மெயின் சுச்ல இருந்து #mcb சர்க்யூட் பாக்ஸ்ல கனைக்சன் செய்யர்க்கு முன்னாடி எர்த் பால்ட் ரிலேவுல சப்ளைய கொடுத்து.👇

அதோட அவுட்பட் லைன #mcb சர்க்யூட் பாக்ஸ்ல கொடுத்துட்டீங்கனா..👇
உங்க வீட்ல எந்த எடத்துல எர்த் வழியா கரண்ட் லீக் ஆனா உடனே டோட்டல் லைனும் கட்டாகிடும்.. அடுத்து நீங்க ஆன் செய்யர்துக்கும் முன்னாடி எந்த #mcb ட்ரிப் ஆகியிருக்கோ 
அந்த ரூம்ல பிரச்சனைனு அந்த லைன விட்டுட்டு எர்த் பால்ட் ரிலேவ ஆன் செய்யலாம்..👇

பால்டான லைன சரியான டெக்னீசியன வச்சு செக் பண்ணி பால்ட் சரி செஞ்சு அந்த லைன ஆன் பண்ணனும்..👇

அடுத்து மிக முக்கியமானது அனைத்து ரூம்களையும் இனைத்து ஒரு காமனான 2sqmm ஒயர் மெயின் பக்கம் கொண்டு வரவேண்டும்..👇

அதுதான் #பாடிஎர்த் அந்த பாடிஎர்த் ஒயரை பூமியில் 2*2 குழி 4அடிக்கு தோண்டி அதில் 3/4" Gi பைபில் 8mm காப்பர் கம்பி பிட் செய்து அந்த பைப் எர்த் குழியில் வைத்து..👇
ஒரு லேயர் கலிமண்,ஒரு லேயர் மணல்,ஒரு லேயர் அடுப்பு கரினு போட்டு புல் செய்து அந்த பைப்பில் காமனாக கொண்டு வந்த அந்த எர்த் ஒயரை கனைக்ட் செய்யனும்..👇
அந்த எர்த் பிட்ல அப்ப அப்ப தண்ணீர் விட்டுட்டா நல்லது.. எர்த் பிட்ல இருந்து எர்த் நல்லமுறைல கிடச்சா உங்க வீட்ல இருக்கவுங்களுக்கு மின்சாரத்தால் ஏற்பாடும் ஆபத்தை 95% தவிர்க்கலாம், மின்சார பொருள்களுக்கு பாதுகாப்பு உறுதி..👇

எர்த் ராடுகள் எமனையும் வெள்ளும்னு Eb ஆப்பீஸ்ல எழுதி போட்டு இருப்பாங்க..😀😀😀

நன்றி..💛🙏🙏🙏
@balu_sg Twitter

தொகுப்பு:
பாபு நடேசன்
#படித்ததில்_பகிர்ந்தது

No comments