Breaking News

தேசிய அழிப்பான் தினம் எப்போது? | Eraser Day | எண்ணங்களும் வண்ணங்களும்

அழிப்பான் என்கிற ரப்பர் 1770ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ரப்பரின் அழிக்கும் குணத்தை, ஜோசப் ப்ரிஸ்ட்லி என்பவர் கண்டுபிடித்தார்.

ஐரோப்பாவின் எட்வார்ட் நைர்னி என்பவர்தான் ரப்பர் என்பதை ஒரு பொருளாக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 
ரப்பர்! 1770ல், ரப்பர் என்று பெயரிடப்பட்டு செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை ரப்பர்கள் உபயோகத்திற்கு வந்தன. ஆனால் அதற்கு முன்பாகவே உருட்டப்பட்ட அல்லது தட்டப்பட்ட ரப்பர் அல்லது மெழுகு உருண்டைகள் "கம் இலாஸ்டிக்" அல்லது கெளட்சொவ் என்று வழக்கத்தில் இருந்தது. அழிப்பதற்கு என்பதாக ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை வெகு சீக்கிரமே நலிந்தும் மெலிந்தும் போயின.

அதனால், ரப்பரின் உபயோகம் மட்டுப்பட்டது. தவிர, இப்படி இயற்கையான பொருளை பதப்படுத்தாமல் உபயோகிப்பதால் ரப்பரால் அழிக்கப்பட்ட பக்கங்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இவற்றை மனதில் கொண்டு சார்ல்ஸ் குட்யியர் என்பவரால் 1839 ம் ஆண்டு ரப்பர் வல்கனைஸ் செய்யப்பட்டு நாம் உபயோகிக்கக்கூடிய வடிவம் பிறப்பெடுத்தது. இதன் பின் ரப்பரின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்தது.

 
தற்போது உபயோகத்திலிருக்கும் எரேசர்கள் இயற்கை அல்லது சிந்தெடிக் வகைப்படும். இயற்கை ரப்பர், ரப்பர் மரத்தின் லேடெக்ஸ்சிலிருந்தும், சிந்தெடிக் வகை ஸ்டெரீன் மற்றும் புடாடீன் எனும் கெமிக்கலில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது
 
சரி செய்திக்கு வருவோம், அதாங்க...!  ஏப்ரல் 15ம் தேதி தான், தேசிய அழிப்பான் (நேஷனல் ரப்பர் எரேசர்) தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

அழிப்பான்  இல்லாதவருக்கு வாங்கி கொடுத்தும் | கெட்டதை அழித்தும் இத்தினத்தை கொண்டாடுவோம். ஹாப்பி ரப்பர் தினம்.

நன்றி: தமிழ் இந்து

No comments