Breaking News

புயல் எச்சரிக்கை கூண்டு (கொடி ) | கஜா புயல் | GAJACyclone அறிந்து கொள்வோம் | பாபு நடேசன்

வணக்கம் நண்பர்களே! 

முதலில் புயல் எவ்வாறு உருவாகிறது என்று பார்ப்போம்...! அப்புறம் கொடி பற்றி தெரிந்து கொள்வோம்.


​பொதுவாகவே கடலின் நீர்மட்டம் 26.5 டிகிரி என்ற அளவில் தான் இருக்கும் இந்த அளவிற்கு மேல் வெப்பம் அதிகமாகும் போது கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கி பரவுகிறது அது வானத்தின் குறிப்பிட்ட உயரத்திற்கு சென்றதும். குளிர்ச்சி அடைந்து மேகமாய் உருவாகிறது. கடல் நீர் ஆவியாகி மேலே செல்லும்போது காற்றின் வேகம் அதிகமாகி ஒரு சுழற்சி உருவாகிறது, அது குறைந்த காற்றழுத்த மண்டலாக மாறி சுற்றிலும் பரவியிருக்கும் காற்றை உள்ளிழுக்கும் போது அந்த சுழற்சி வலுவடைந்து ஒரு புயலாக மாறுகிறது. 


காற்றின் வேகம் மணிக்கு 75 கி.மீ என்ற அளவில் இருந்தால் மட்டுமே அது புயல் என அழைக்கப்படுகிறது. புயல் மெள்ள மெள்ள வலுவடையும் போது அது ஒரு வண்டிச்சக்கரம் போல் உருமாற்றம் பெற்று சுழல ஆரம்பிக்கிறது. அந்த சக்கரத்தின் மைய பகுதியை புயலின் கண் என்று அழைக்கிறார்கள்.


காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக கடலின்  மேற்பரப்பில் உருண்டு கொண்டே போகும் .மேகங்களை சுருட்டிக் கொண்டு வேகமாக கரையை நோக்கி பயணிக்கும்.

இப்படி தான் புயல் கரையை கடக்கும்.

சரி இப்போ எச்சரிக்கை கூண்டு/கொடியை பற்றி பார்ப்போம்.

புயல் எச்சரிக்கை கொடி (கூண்டு ) ஒன்று ஏற்றப்பட்டுள்ளது , இரண்டு ஏற்றப்பட்டுள்ளது என் செய்திகளில் கேட்டு இருப்பீர்கள். அந்த எண்ணின் விளக்கதினை இங்கே காணலாம். 

துறைமுக புயல் எச்சரிக்ககை கொடி உணர்த்தும் செய்திகள்.

குறியீடு எண்
விளக்கம் 


எண் 1 
புயல் உருவாகும் சூழல் முன்னறிவிப்பு (பலத்த காற்று வீசலாம் ஆனால் பாதிப்பு இல்லை) 

எண் 2 
புயல் உருவாகியுள்ளது (துறைமுகத்தைவிட்டு கப்பல் வெளியேறவேண்டும்) 

எண் 3 
பலத்த காற்றோடு மழையும் பெய்யும் 

எண் 4 
துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து 

எண் 3, 4 
மோசமான வானிலை 

எண் 5 
புயல் உருவாகிவிட்டது புயல் இடது பக்கமாக கரையைக் கடக்கும் 

எண் 6 
புயலால் உருவாகிவிட்டது புயல் வலது பக்கமாக கரையைக் கடக்கும் 

எண் 7 
புயலால் உருவாகிவிட்டது அது துறைமுகம் வழியாகவோ அல்லது வெகு அருகாமையிலோ கரை கடக்கும் 

எண் 5,6,7 
துறைமுகத்துக்கு ஏற்பட்ட ஆபத்தைக் குறிக்கிறது. 

எண் 8 
மிகப்பெரும் ஆபத்து தீவிர அல்லது அதிதீவிர புயல் ஏற்பட்டு துறைமுகத்தின் இடது பக்கம் கரையைக் கடக்கும் 

எண் 9 
மிகப்பெரும் ஆபத்து தீவிர அல்லது அதிதீவிர புயல் ஏற்பட்டு துறைமுகத்தின் வலது பக்கம் கரையைக் கடக்கும் 

எண் 10 
அதிதீவிரப் புயலால் பெரிய அளவுக்கு ஆபத்து புயல் துறைமுகத்தை நேரடியாகவோ மிக அருகாமையிலோ தாக்கும் 

எண் 11 
வானிலை மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படும், மோசமான வானிலை 

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு வடிவத்தில் (உருளை முக்கோணம்... என) கூண்டுகள் துறைமுக கெடிக்கம்பத்தில் ஏற்றப்படும்.


புயல் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது. காற்றின் வேகத்தின் அடிப்படையில் புயல் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது 

காற்றின் வேகம்
புயலின் வகைப்பாடு 


31 குறைவு 17 நாட்  -- காற்றழுத்த தாழ்வு பகுதி 

31 kmph 49 17 - 27 நாட் -- காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

50 kmph 61 28 - 33 நாட் -- ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் 

62 kmph 88 34 - 47 நாட் -- புயல் 

89 kmph 118 48 - 63 நாட் -- தீவிர புயல் 

119 kmph 221 64 - 119 நாட் -- மிக தீவிர புயல் 

221 மேல் 120 நாட் மேல் -- மாபெரும் புயல் 

தொகுப்பு : பாபு நடேசன்

No comments