Breaking News

பள்ளிக்கூடம் திறக்கப்போறாங்க | பெற்றோர்களுக்கான பதிவு

 சின்னக்குழந்தைகளுக்கு நவம்பர்ல இருந்து பள்ளிகள்  ஆரம்பிக்கப்போகுது. அதற்கான ஒரு முன்னேற்பாடுகளைப் பற்றிய ஒரு இழை. #திரி




இத்தனை நாள் ஆன்லைன்ல கிளாஸ் நடந்திட்டிருந்தது. அதனால நாம டயத்துக்கு தூங்க வைக்கறது, எழுப்பி விடல், பல் துலக்க வைக்கறது, தூய்மையான ஆடை அணியவைக்கறதுனு பல விசயங்கள்ல எந்தளவு சரியா இருந்திருப்போம்னு சொல்லமுடியாது. அதனால இந்த ஒரு வாரத்தை உங்களுக்கான பிரிப்பரேசன் டைமா எடுத்துக்கோங்க

சரியான நேரத்துல குழந்தைகளை தூங்க வைங்க, சரியான நேரத்துல எழுப்பி காலைக்கடன்களை செய்ய வைங்க. தவிர நேரத்துக்கு சாப்பாடு, ஸ்னாக்ஸ், லஞ்ச் இவற்றை எட்டு மணிக்குள்ள செஞ்சு உங்களையும் தயார் படுத்திக்கோங்க.

குழந்தைகளை எதாவது உடல்பயிற்சி மாதிரி கட்டாயம் செய்ய வைங்க. குறைஞ்சபட்சம் கொஞ்ச தூரமாவது நடக்க வைங்க. அது அவங்க ஒரே இடத்துல இருக்கறதால ஏற்படற மனச்சோர்வை அகற்றி புத்துணர்ச்சி கொள்ளச்செய்யும்.

கிட்டத்தட்ட ரெண்டு வருசமா வீட்டுலயே இருக்கறதால மத்தவங்ககிட்ட பேசறது, பழகுறது குறைஞ்சிருக்கு, அதை மாத்த முயற்சி பண்ணுங்க, பெரியவங்ககிட்ட மரியாதையா இருக்க சொல்லித்தாங்க.

இப்ப அவங்க உக்காந்த இடத்துலயே சாப்பாடு, ஸ்னாக்ஸ், பொம்மைகள், எழுதுபொருட்கள் எடுத்துத் தந்தே பழகிருப்பீங்க, அதை மாத்துங்க. அவங்கள சுயசார்புள்ள குழந்தைகளா வளத்தறதுதான் அவங்களுக்கு நாம செய்யற பெரிய நல்ல விஷயம்.

எந்த விசயம் செய்யனும்னாலும் அதுக்கு எப்பிடி preplan பண்ணனும்னு சொல்லிக்குடுங்க. பொருட்களை எபபிடி organisedஆ வைக்கறதுனு கத்துக்குடுங்க.

முதல்ல குழந்தையோட மைண்ட் செட்ட ரெடி பண்ணனும். அடுத்த வாரம் ஸ்கூலுக்குப் போகப்போற ஜாலிதான் அப்பிடினு அடிக்கடி சொல்லி மனதளவுல தயார்படுத்துங்க. தயவுசெஞ்சு தப்புப்பண்ணா ஸ்கூலுக்கு அனுப்பிடுவேன்னு நெகட்டிவா மட்டும் சொல்லிடாதீங்க.

கோவமான குழந்தையும் அழுதிட்டே இருக்கற குழந்தையும் சரியா படிக்க முடியாதுனு சொல்றாங்க. பசிலதான் கோவமும் அழுகையும் அதிகமா வரும், அதனால அவங்களுக்குப் பிடிச்சத சாப்பிடவெச்சு சந்தோசமா விளையாட விடுங்க.

ஸ்கூல் போற குழந்தையோட டிபன் பாக்ஸ்லயும் வாட்டர்கேன்லயும் அவங்க பேர் எழுதி வைங்க. ஷேரிங் சொல்லிக்குடுத்தோம், இந்த நோய்த்தொற்றுக்காலத்துல நோ ஷேரிங்கையும் சொல்லித்தர வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.

டாய்லெட் யூஸ் பண்றக்கு முன்னாடியும் அப்புறமும், பிளஷ் பண்ண சொல்லிக்குடுங்க. மாஸ்க், கைகளை இருபது நிமடத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்தறதோட நன்மைகளை இன்னொரு தடவை சொல்லிக்குடுப்போம்.

ஸ்கூல்ல எத்தனை முடியுமோ அத்தனை ஈவன்ட்லயும் கலந்துக்க சொல்லுங்க. வெற்றி தோல்விகளை சமமா பாவிக்கப்பழகற வயசு இதைவிட்டா கிடைக்காது. கலந்துக்காம இருக்க சாக்கு சொன்னாலும் கேக்காதீங்க.

குழந்தைங்களப்பாத்து நம்மள பிடிக்காம போயிடுமோனு பயப்படாதீங்க, ஒரு நல்ல அப்பா அம்மா என்னிக்குமே குழந்தைகளுக்கு நண்பனா இருக்க முடியாது. அப்படி இருக்கனும்னா பதினெட்டு வயசுக்கு மேல பிரண்டா இருந்துக்கோங்க.

கடைசியா Digital detoxification, இதுவரைக்கும் குழந்தைங்க போன்ல விளையாடியிருந்தா பரவால்ல, எவ்வளவு கஷ்டப்பட்டாவது அதை நிப்பாட்டுங்க. எவ்வளவு அழுதாலும். மொபைல் போனால அவங்க வேறொரு கற்பனை உலகத்துக்குள்ள போறாங்க, அவங்க கவனம் சிதறுது, ஞாபக சக்தி குறையுதுனு புரிஞ்சிக்கோங்க.

அரசாங்கம் பல கருத்துக்கணிப்புகளையும், ஆய்வுகளையும் நடத்தி தான் இந்த பள்ளிகளை திறக்கறாங்க. அதனால தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புங்க! #HappyParenting #HappySchooling 

நன்றி : டாக்டர் ராஜஸ்ரீ | ட்விட்டரில் படித்தது 

Thanks 
Dr Rajashree
Twitter @renugarain

தொகுப்பும் மீள்பதிவும் 
பாபு நடேசன் 



No comments