நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் இருங்கள்.
நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் இருங்கள்.
உங்களோடு -- பாபு நடேசன்
நம்மைச் சுற்றி எப்போதும் நல்ல எண்ணங்கள், நல்ல அலைவரிசை இருந்தால் நாம் இயல்பாகவே ஒரு வேலையை அதிக முனைப்புடன் எதிர்கொள்வோம். அதனால், எப்போதும் “நேர்மறை எண்ணங்களுடன்” செயல்படுபவர்களை நம்மிடம் வைத்துக்கொள்ளுங்கள் கொள்ளுங்கள்.
"எதிர்மறை எண்ணங்களுடன்” செயல்படுபவர்களை நம்மிடம் இருந்து விலக்கிக் கொள்ளுங்கள்.
“தெரியாது”, “நடக்காது”, “முடியாது”, “கிடைக்காது” என்று சொல்லுபவர்களை அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
உற்சாகமாக இருங்கள். சோகத்தை விடுங்கள். நீங்கள் செய்யும் வேலையை சாதாரணமாக செய்ய வேண்டுமே என செய்யாதீர்கள்; இந்த வேலையை என்னைவிட யாராலும் சிறப்பாகச் செய்ய முடியாது என்று நினைத்து செயல்படுங்கள்.
பலமுள்ளவர்களாக உணருங்கள்
உடல் வலிமை, பண வலிமை— இவைகளை விட மனவலிமை மிக முக்கியம்.
உங்களைப் போல சக்திவாய்ந்தவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என எண்ணிக்கொள்ளுங்கள்.
உடனே சிரிக்காதீர்கள்—இது உண்மை.
உங்கள் “சிறந்த திறமை” என்ன என்பதே இன்னும் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்.
உங்கள் வலிமையை அறிந்து செயல்பட்டால், நீங்கள் தான் வெற்றி மனிதர்.
உங்களை நேசியுங்கள்
தன்னை நேசிக்காத மனிதன் வெற்றி பெற முடியாது.
உங்களுக்கு உங்களை பிடிக்கும்படி உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கே அன்பு கொடுங்கள்.
நீங்கள் முழு மனதுடன் ஒருசெயலை செய்தால், உங்களை வெல்ல யாரும் இல்லை.
“என்னைப் போல அழகானவர் யாருமில்லை, எனைப்போல் திறமையானவர் யாருமில்லை”
என உங்களுக்கே அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
பயணம் தொடருங்கள்
வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்.
சிலருக்கு வெற்றி விரைவில் வரும்,
சிலருக்கு தாமதமாக வரும்.
ஆனால் அதன் காரணமாக சோர்ந்து விடாதீர்கள்.
வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து,
தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
நல்ல எண்ணத்துடன் பயணம் செய்தால்—
வெற்றி கிடைக்கிறதா கிடைக்கலையா என்பதை விட,
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் இருக்கும்.
வெற்றி நிச்சயம்!
உன்னை நீ நம்பினால்....!
No comments