புத்தாண்டு 2014 | 12 கட்டளைகளுடன் ஒரு சிறப்பு பதிவு
புத்தாண்டு வெறும் வார்த்தைகளால் கொண்டாட வெண்டியவை அல்ல; நமது வாழ்க்கையினால் கொண்டாட வேண்டியது இந்தப் புத்தாண்டை அர்த்தமுள்ளதாய், வெற்றிமிக்கதாய் ஆக்க 12 கட்டளைகள் போதுமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சிறப்பு பதிவு

பத்து நிமிடங்கள் முன்னதாக
|
உங்களுக்கான நாளை
வழக்கமாகத் தொடங்குவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகத் தொடங்குங்கள்.
|
பத்து நிமிடங்கள் தாமதமாக
|
பரவசமோ, பதட்டமோ, உடனே எதிர்வினை ஆற்றாதீர்கள். பத்து நிமிடங்களுக்குப்
பிறகு எதிர்வினை ஆற்றுவதை யோசியுங்கள். திட்டுவதாகக்
கூட இருக்கலாம். எதையும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு செய்ய தீர்மானியுங்கள்
|
பத்து நிமிடங்கள் மௌனமாக
|
கண்டிப்பாக பத்து
நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள். அந்த நேரத்தில் அலைபேசியினை அணைத்துவிடுங்கள்.
|
முதல் முப்பது நிமிடங்கள்
|
ஒரு நாளின்
முதல் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.
|
உணவிலும் ஓய்விலும் ஒழுங்கு
|
உணவுப்
பழக்கத்திலும் ஓய்விலும் மிதமான, இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள், வயிற்றின் மீது வன்முறையை செய்யாதீர்கள்.
|
மனிதர்களை நெருங்குங்கள்:
|
மனிதர்களை
நிறை குறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும்
நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.
|
அடுத்து என்ன? இதுவே
மந்திரம்
|
வெற்றியோ
தோல்வியோ, சாதனையோ சவாலோ,
எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன
என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். வெற்றியின்
மந்திரங்களில் முக்கியமானது.
|
நம்பிக்கைத் தீர்மானம்
நிறைவேற்றுங்கள்
|
ஒவ்வொருநாள் விடியலிலும்
உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
|
நன்றி அறிவிப்புத் தீர்மானமும்
போடுங்கள்
|
ஒவ்வொரு நாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும்
மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.
|
கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும்
கையில் கட்டுங்கள்
|
உங்கள்
நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.
|
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் | இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும். |
மனிதத்தன்மையே கடவுள் தன்மையின் ஆரம்பம் | மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பது முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள். |
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - பாபு நடேசன் புது தில்லி
|
No comments